வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை சீருடை அணிந்த காவல்துறையினரும், கிராமப்புறங்களில் காக்கிச் சீருடை அணிந்த காவல்துறையினரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை சரி செய்ய அதிகாரம் இருக்கிறது.
அதேநேரத்தில் வாகனஓட்டிகளிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே உண்டு. இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாக https://echalan.parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டத் தவறினால் முதலில் ஒரு விண்ணப்பம் வரும். அதையடுத்து நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்படும். இதையடுத்து தற்காலிகமாக உங்களுடைய லைசென்ஸ் தடை செய்யப்படலாம்.