Categories
தேசிய செய்திகள்

“பைக் டாக்ஸியில் பயணம் செய்த இளம்பெண்”…. வீட்டுக்கு சென்ற பின் காத்திருந்த அதிர்ச்சி… 3 பேர் அதிரடி கைது…!!!

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பி.டி.எம் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்(22) ஒருவர் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இளம்பெண் இரவு தன்னுடைய நண்பர்கள் வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சிக்காக சென்ற போது மது குடித்துள்ளார். அதன் பின் நீலட்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டேக்ஸி முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பைக் டாக்சி டிரைவராக சகாபுதீன்(26) என்ற நபர் வந்து அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றபோது அவர் போதையில் இருந்ததை சகாபுதீன் தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து சகாபுதீன் அந்த பெண்ணை அவர் பதிவு செய்த முகவரிக்கு அழைத்து செல்லாமல் மயக்க நிலையில் இருந்ததால் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது  சகாபுதீனின் விட்டில் அவரது  காதலியும் இருந்துள்ளார். அதன் பின் சகாபுதீன் தனது நண்பரான அக்தர் என்பரை அழைத்து இருவரும் அந்த இளம்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின் மயக்க நிலையில் இருந்து தெளிவடைந்து காலையில் எழுந்த அந்த இளம்பெண் தான் வேறொரு வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டார். ஆனால் சகாபுதீன் அந்த பெண்ணிடம் மது போதையில் இருந்ததால் உங்களை எங்களது வீட்டில் வைத்து பாதுகாப்பாக பார்த்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளம்பெண் அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணிற்கு கடமையான உடல் வலி மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்றபோது, அந்த இளம்பெண் கூட்டு பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி சகாபுதீன், அவரது காதலி, அக்தர் ஆகிய 3  பேரையும் கைது செய்துள்ளனர். வெளியான முதற்கட்ட  தகவலில் கைது செய்யப்பட்ட 3 பேரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |