தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வருகின்றது. இத்திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார்.
இந்த நிலையில் அஜித் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு இமயமலை பகுதிக்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் கேத்தர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் இவர் தற்போது புனேவிற்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது