உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல தொழில்கள் செய்தாலும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை.
உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஏராளமான பிசினஸ் செய்கிறார். ஆனால் அவர் எவ்வளவு தொழில்கள் செய்தாலும், இதுவரை மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் எலான் மஸ்க்கிடம் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஒரு பதிலைக் கூறினார். அதாவது சிறுவயதிலிருந்தே எலான் மஸ்க்குக்கு மோட்டார் சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் உண்டுமாம்.
இதனால் எலான் மஸ்க் தன்னுடைய 8 வயதிலிருந்தே குழந்தைகள் ஓட்டும் மோட்டார் சைக்கிளை மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டினாராம். இவருடைய 17 வயதில் மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் எலான் மஸ்க் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எலான் மஸ்க் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்திலிருந்து எலான் மஸ்க் அவர்களுக்கு மோட்டார் சைக்கிளின் மீது ஆர்வம் இல்லையாம்.