Categories
தேசிய செய்திகள்

பைக் திருடியதாக எண்ணி…. இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்…. பரிதாபமாக பறிபோன உயிர்….!!!

கேரள மாநிலம், பாலக்காட்டில் பைக் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள ஒலவக்கோடு என்ற இடத்தில் நேற்று இரவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் .உயிரிழந்தவர் மலம்புழாவை சேர்ந்த 27 வயதான ரஃபிக் என்பது அடையாளம் காணப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கினர். அப்போது ஒலவக்கோடு  அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி இருந்த பையை காணவில்லை. அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது அதில் ஒரு வாலிபர் இருப்பதை கண்டு அவரிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து இதில் கைகலப்பு ஏற்பட்டு வன்முறையாக மாறிய நிலையில் அந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். முண்டூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திருப்பிய இளைஞரை இந்த கும்பல் அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |