ஹோண்டா நிறுவனம் H’ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிவித்துள்ளது. அதன்படி சிபி350, புதிய மேட் கிரே ஷேடுடன் மோனோ டோன் ஃபினிஷ் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிபி350 சிங்கிள் டோன் குளாசி ப்ளூ பெயிண்ட் நிறத்தில் வர இருக்கிறது. இவ்வாறான நிறங்கள் தவிர ஹார்ட்வேர் உள்ளிட்ட என்ஜின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் அமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் 5,500rpm-ல் 20.8bhp பவரையும், 3000rpm-ல் 30Nm பீக் டார்க்கையும் கொடுக்கும் திறன் பெற்றது. இதன் டிரான்ஸ்மிஷன் 5 ஸ்போட் யூனிட் ஆக உள்ளது. இதன் இந்திய சந்தை மதிப்பு ரூபாய் 1.70 லட்சம் முதல் தொடக்கம் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
Categories