Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய லாரி….. மது போதையில் இருந்த ஓட்டுனர்‌…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!!

இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற லாரி ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்மம் அடி கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கான` நடவடிக்கைகளை காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளின் மெதுவாக செல்லுதல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டக்கூடாது, மிதமான வேகத்தில் சாலையில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விதித்துள்ளனர். இருப்பினும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துகள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.ஆனால் சிலர் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதும் உண்டு

அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் இருந்து அரியலூர் நோக்கி நிலக்கரியை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பைக் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியின் அடிப்பகுதியில் பைக் சிக்கி கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை லாரியில் பைக்கை இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் லாரியை மறித்து ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன்பிறகு பொதுமக்கள் ஓட்டுனரை விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரி ஓட்டுனர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |