பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் வார்டுபாய்க்கு உதவியாக பணிபுரிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீன் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒருமாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.