கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் மிடில் வெயிட் அட்வென்சர் டூரர் பைக்- ஐ வாங்குவோருக்கு 70 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படுகின்றது. இந்திய சந்தையில் தற்போது இதன் விலை 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனால் புதிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. கவாசகி நிறுவனம் விற்பனை செய்து இந்த மாடலுக்கு மாற்றாக விரைவில் 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார் சைக்கிள் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. எனவே இந்த தள்ளுபடியை பைக் வாங்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.