மாஸ்டர், சுல்தான் இருபடங்களையும் 2021 பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய்- விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதமே திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி செய்ததும் ஊரடங்கின் காரணமாக முடியாமல் போனது. மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு முடிவு எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு பிகில், கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்து வசூலை வாரி குவித்ததை போல இந்தஆண்டும் விஜயின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் படம் வெளியாகி வசூலை வாரி குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுல்தான் பட இயக்குனர் சுல்தான் படத்தை பண்டிகை காலங்களில் வெளியிட திட்டமிட்டு உள்ளதால் அந்த பண்டிகை காலம் பொங்கலாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
.