Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ஊருக்கு சென்ற நபர்கள்….. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்….!!!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குமார் மற்றும் வெங்கடவரதன் என்ற இருவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் முழுவதும் தீ பற்றி எரிந்து உள்ளது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த லாரியும் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |