ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்களுக்கு 9445014450, 9445014436ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in, www.busindia.com, www.paytm.com மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.