Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்…. செம ஜாலி தான்…!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். இதனையடுத்து மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தென்மாவட்ட மக்களுக்கு பயன்படும் விதமாக சென்னையில் இருந்து நெல்லை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி ஜனவரி 12-இல் தாம்பரம்- நெல்லை ரயில் இரவு 9.45க்கும், 13இல் நெல்லை- தாம்பரம் ரயில் இரவு 9.30 க்கும், எழும்பூர்- நாகர்கோவில் ரயில் 13 இல் மாலை 3.30க்கும், நெல்லை- தாம்பரம் ரயில் ஜனவரி 16 இல் இரவு 7 மணிக்கு, நாகர்கோவில்- எழும்பூர் ரயில்14-இல்  மாலை 3.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

 

Categories

Tech |