Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் – நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல் ஜனவரி 13 ஆம் தேதி இரவு 07:30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக   தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |