தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் பொங்கல் பண்டிகை என்பதால்வெளியூரில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 75% பயணிகளுடன் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கியது. அதன்படி வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். அதனால் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பண்டிகை காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பேருந்து மற்றும் ரயில் என அலைமோதும் கூட்டத்தில் தான் மக்களும் பயணம் செய்கின்றனர். கூட்டத்தில் யாருக்காவது ஒரு நபருக்கு தொற்று இருந்தாலும் அது பரவத் தொடங்கிவிடும். எனவே பொங்கலுக்காக வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என அரசு அறிவுறுத்தியுள்ளது.