பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, வண்டி எண் 06001 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி. 12 புதன்கிழமை இரவு 09.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 நெல்லை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.13ம் தேதி வியாழக்கிழமை இரவு 09.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜன.13ம் வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன.14ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். வண்டி எண் 06004 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.