Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘மாஸ்டர்’… நடிகர் தனுஷ் போட்ட ட்வீட்… இணையத்தில் வைரல்…!!!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . இதையடுத்து வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ‌.

அதில் ‘நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருப்பது திரை விரும்பிகளுக்கு ஒரு மிகச்சிறந்த செய்தியாகும் . இந்தப் படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் பார்த்து தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க ரசிகர்கள் உதவி செய்வார்கள் என நம்புகின்றேன். ஒரு படத்தை தியேட்டரில் பார்ப்பது போல சந்தோஷம் வேறு எதிலும் இல்லை . பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனைவரும் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |