தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காததற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பையும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தர வேண்டும்.குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு அரசு வழங்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்தனர். ஆனால் அரசின் அறிவிப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. எனவே கரும்பு தர வேண்டும் என இ பி எஸ் தெரிவித்துள்ளார்