தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பொங்கல்பரிசு தொகுப்பில் வழக்கமாக வழங்கபடும் கரும்பு பட்டியலில் இடம் பெறாமல் இருந்ததனால் இந்த வருடம் பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படாதா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு இடம்பெறும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.