Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு 10,000 சிறப்பு பேருந்துகள்….!! அதோடு பயணிகளுக்கு அலர்ட் கொடுத்துள்ள தமிழக அரசு…!!

ஜனவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை 10000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 17 முதல் 19ஆம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் இரண்டு தினங்களில் திரும்ப கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் ஜனவரி 16 அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும்படி பயணிகளிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் வழக்கமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகள் போக கூடுதலாக 10,409 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |