Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு 20 பொருட்கள்…. “ஆனால் கரும்பு இல்லை”… விவசாயிகள் ஏமாற்றம்..!!

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம்ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகையில் கரும்பு வழங்கிய நிலையில், 2022 பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.

இந்நிலையில் அரசு கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடி செய்த நிலையில் பட்டியலில் இடம் பெறாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்..  2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெற்று வந்தது, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாவில்லை.. எனவே அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Categories

Tech |