Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொங்கலும் அதுவுமா இப்படி ஒரு சாபமா?”…. திமுக அரசை ஒரே போடு போட்ட ஓபிஎஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் நந்தனின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நந்தனின் மகன் குப்புசாமி ( வயது 35 ) திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்புசாமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஓபிஎஸ், பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக நந்தன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிமுக சார்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் இது போன்ற நிகழ்வு பிற பகுதிகளிலும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தானே தவிர அரசின் மீது குற்றம் சாட்டுவதற்காக சுட்டிகாட்டப்படவில்லை.

எனவே உண்மைத்தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக உண்மையை மூடி மறைப்பதற்காக தமிழக அரசு குறையை சுட்டிக் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளது. இதனால் தற்போது ஒரு உயிர் பறிபோனது. அவருடைய இறப்பிற்கு திமுக அரசு தான் காரணம். மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்சி நடத்தும் இந்த திமுக அரசு விரைவில் வீழும் என்று சாபமிடும் வகையில் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |