Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு… WOW…!!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணம் விலையை குறைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து மற்றும் விமான சேவைகள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணம் விலையை குறைத்து ரூ.877 முதல் நிர்ணயித்துள்ளது. ஹிட் சலுகையின் மூலம் இப்போது புக் செய்தால் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20 வரை பயணம் மேற்கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 17 வரை மட்டுமே கிடைக்கும். இந்த சலுகையில் புக் செய்துவிட்டு டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |