பொங்கள் பண்டிகையை முன்னிட்டு நடத்தபட இருக்கும் ஜல்லிக்கட்டுக்கான புதிய விதிமுறைகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென் மண்டல ஐ.ஜி அன்பு, போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டில் 300 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.இதனையடுத்து ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கட்டாயமாக 2 தவணை தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.