தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பாக மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமரான மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் பாஜக சார்பாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு பாஜக சார்பாக மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.