தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது குறித்த தகவல்களும் அப்போது வெளியாகிய வண்ணம் இருந்தது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், எதிர்கட்சியாக இருந்தபோது 75,000 வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியதாகவும், பனை பொருட்களை விநியோகிப்போம் என்ற அறிவிப்பையும் அரசு நிறைவேற்றவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.