பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், முறையாக வழங்க படுகிறதா என்றும் மாவட்ட கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தலைமையில் கீழக்கரை, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின்போது கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் கிராம நிர்வாக அலுவலர் அங்கையர் கண்ணன்ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.