தமிழகத்தில் அரசு கொடுக்கும் பொங்கல் பணம் டாஸ்மார்க் மூலமாக திரும்ப வந்துவிடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் மக்களுக்கு பொங்கல் பரிசு rs.2500 வழங்கிக் கொண்டிருப்பதை, அதிமுக தேர்தலுக்காக கொடுத்து வருகிறது என்று அனைத்து கட்சியினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது, “அரசு கொடுக்கும் பொங்கல் பணம் எங்கேயும் போகாது. டாஸ்மார்க் மூலமாக திரும்ப வந்துவிடும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.