Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா”?….. செப்டம்பர் 12 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் வரும் 12ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து வேலை பார்க்கும் இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் என பலரும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகையின் போது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊருக்கு சென்று பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று விரும்பும் பல குடும்பங்கள் உள்ளன.  வரும் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை துவங்கி 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல திட்டம் இடுபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் வரும் 12ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயிலில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயனர் முன்கூட்டியே ட்ரெயின் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி பொங்கலுக்கு ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிடும். தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ளது, இதனால் கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு செல்வோர் அடுத்த வாரம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |