Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு நிதி உதவி ரூ.2,500 தொடர்ந்து வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ.2500 தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நிதி உதவி இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்குவது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 நிதி உதவி அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம் என்று அறிக்கையில் கூறப்படவில்லை. எனவே இதுதான் ‘சொல்லாததையும் செய்வோம்’ என்று அவர் விமர்சித்துள்ளார

அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.5,604 கோடி  மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது வெறும் ரூ.1,088 கோடியாக  குறைக்கப்பட்டுவிட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்தினால் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகின்ற நிதி உதவி தொகை அளிக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

எனவே புதிதாக எதையும் வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றதை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மக்களை விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2500 நிதி உதவியைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |