Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு”…. ரயில் பயணிகளுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து இருக்கிறது. அதன்படி தாம்பரம்- நெல்லை இடையில் அதிவேக சிறப்பு ரயில் எண் (06001) ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லை-தாம்பரத்திற்கு அதிவேக சிறப்பு ரயில் எண் (06002) வரும் 13ஆம் தேதி வியாழக்கிழமை நெல்லையில் இருந்து இரவு 9.30  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோன்று சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயல் (06005) வரும் 13ம் தேதி வியாழக்கிழமை  மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் (06006) நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து 14ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த நாகர்கோவில்-சென்னை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06006) மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். நாகர்கோவில்- தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு  ரயில் (06004) வருகின்ற 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து மாலை  4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்நிலையில் ஜனவரி-14 பொங்கல் பண்டிகையன்று சென்னை கோட்ட ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி 14-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |