Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை….!! ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை….!! தொழிலாளர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.

மற்ற ஆண்டுகளை போலவே 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. மக்கள் பண்டிகைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |