தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பயணம் செய்வதற்கு இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories