தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து சிறப்பு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகின்றது. கடந்த ஆண்டு 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பேருந்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே முன்பதிவு செய்து மக்கள் தயாராக இருங்கள். இல்லையென்றால் நீங்கள் ஊருக்கு போவது மிகவும் சிரமமாகிவிடும்.