தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது.
மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.