Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த பொருட்கள் வழங்கப்பட இருப்பதால் பரிசுப் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க ஒன்றுக்கு 420 ரூபாய் என்று டெண்டர் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு வழங்குவதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 505 ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு பொங்கல் பரிசு பொருட்கள் மக்களுக்கு சரியாக வினியோகிக்கப் படுகிறதா? என்பதையும் கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. வினியோகத்தில் கவனம் செலுத்தும் அரசு முதலில் கொள்முதலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Categories

Tech |