Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: இவர்களுக்கு மட்டும் டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கபடும் என்று முதல் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,, பாசிபருப்பு நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களும் மஞ்ச பையில் வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் நாள், நேரம், குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |