தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மளிகை பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் காலாவதியான பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பொருட்கள் கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடங்குகளில் இருந்து வரும் பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய கிடங்குகளில் ஆய்வு செய்யுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.