பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அட்டையை காண்பித்து பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.