பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு, பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்குமாறு பேட்டிகள் வாயிலாக விடியா திமுக அரசுக்கு நான் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். மேலும் கழக விவசாய பிரிவின் சார்பில் வருகின்ற 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என இன்று (28.12.2022) அறிவித்துள்ளதால் கழக விவசாய பிரிவின் சார்பில் 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் காலங்களிலும் விடியா திமுக அரசு, மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் அக்கறையில்லாமல், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்போது மக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது,
கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!இனிவரும் காலங்களிலும் விடியா திமுக அரசு, மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் அக்கறை இல்லாமல்,1/2@AIADMKOfficial pic.twitter.com/44G6ybYZw9
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2022