தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.
அதாவது அரசு 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க தொகையும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில்பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பண்டிகைக்கு முன் பொங்கல் பொருட்கள் கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. என்ன பொருட்கள் வழங்கப்படும். எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் உள்ளிட்ட முழுமையான தகவலை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.