தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு கருப்பு, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுகின்றது. அதன்படி, இந்த பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவருக்கும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த கரும்பு வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் ஒரு கரும்புக்கு 13 ரூபாய் என விலை நிர்ணயம் வைத்து கூட்டுறவுத்துறை நிர்வாகிகளிடம் பணம் பட்டுவாடா செய்கின்றன. ஆனால் கூட்டுறவுத்துறை நிர்வாகிகள் 18 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியதாக கணக்கை மாற்றி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் வரை நஷ்டம் ஆகின்றது. மேலும் கரும்பு விளையாத இடங்களில் கூட கரும்பு வாங்கியதாக கணக்கில் காட்டி காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது போன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புகான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடு தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.