Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடைக்கலையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலை உடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கனை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 12-ஆம் தேதி வரையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தகவல் மற்றும் புகாரி ஏதேனும் இருந்தால் 044-27662400 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் குறித்த புகார் இருந்தாலும் தெரிவிக்கலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |