பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 பணம் கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
தற்போது பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்கள் படம், சின்னம் போன்றவை இடம்பெறுவதாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கட்சியினரின் ஆர்வமிகுதியால் இரு இடங்களில் கட்சி தலைவர்களின் படங்களை விநியோகம் செய்யப் பட்டதாகவும், பிற இடங்களில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ டோக்கன்களில் அதிமுகவை சேர்ந்த படங்கள், சின்னம் இல்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.