Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது.

இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயோடு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்படவுள்ளது. இதனை முதல்வர் நாளை மறுநாள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் தொகுப்புக்கு தரமான பச்சரிசி, சர்க்கரையை விநியோகம் செய்ய வேண்டும், குறைபாடுகள் இருந்தால் விற்பனையாளர்களே முழு பொறுப்பு. கரும்பின் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் வழங்க வேண்டும். எந்த விதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தவிட்டுள்ளது.

Categories

Tech |