நியாய விலை கடை பணியாளரை பணியிடை நீக்கம் செய்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் கிராமத்திலுள்ள கே.வி.எஸ். நகரில் அரசு நியாய விலை கடை இருக்கிறது. இந்த கடையில் சக்கரவர்த்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்புகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நியாய விலை கடை பணியாளரான சக்கரவர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.