Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பரிசு தொகுப்பாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில் ஆவின் நெய்யும் 100 மில்லி லிட்டர் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |