தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
தைத் திருநாளை தமிழக மக்கள் சிறப்பான வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது.
இன்று முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வினியோகிக்கப்படும். வருகிற 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்கும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.