நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.
அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேபோல் நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு உரிய எடையிலும், தரமானதாகவும் பொருள்கள் வழங்கப்படுவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.