ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். இதனையடுத்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்புகள்:
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கரும்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, புளி, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பை விநியோகம் செய்யப்படும்.